உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்த மேலும் 18 முழுமையற்ற விசாரணைக் கோப்புகளை சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

மொத்தமாக 100 முழுமையற்ற விசாரணை கோப்புகள் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த கோப்புகளின் விசாரணைகளை உடனடியாக நிறைவுசெய்யுமாறும் சட்டமா அதிபர் தப்புல டிலிவேரா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.