(இராஜதுரை ஹஷான்)

   நல்லாட்சி அரசாங்கத்தில் 5 வருட காலப்பகுதிக்குள் நான்கு அரச  வங்கிகளில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும்  நிதி முறைக்கேடு மற்றும், நிதி கொள்கைத்திட்ட  முறைக்கேடு ஆகியவை தொடர்பில்  விசாரணைகளை   முன்னெடுக்க    மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி  தலைமையில்  நால்வர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.  மூன்று மாத  காலத்திற்குள் அறிக்கை  சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வங்கி ,  இலங்கை வங்கி , தேசிய சேமிப்பு வங்கி , பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில்  ஆராய இக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக  மேல் நீதிமன்ற முன்னள்  நீதிபதி சிசிர ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சின் உறுப்பினர் ஒருவர் குறித்த குழுவின் செயலாளராகவும்.  பட்டய கணக்காளர் சுசந்த த சில்வா  , ஓய்வுபெற்ற மேலதிக கணக்காய்வாளர் நாயகம் டபுள்யூ. பிரேமாநந்த ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால்  பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்பவும், அரச  வங்கிகளில் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும்  நிதி நிர்வாக முறைக்கேடுகள் தொடர்பில் ஆராயவும்   இக்குழு  நியமிக்கப்பட்டுள்ளது.  மூன்று மாதத்திற்கு   பிறகு கிடைக்கப் பெறும் அறிக்கைiயை  நிதியமைச்சின் செயலாளர்  ஊடாக   அமைச்சரவைக்கு  சமர்பிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.