கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த விபத்து சம்பவம் இன்று மாலை  5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே குறித்த விபத்தில் சிக்கியுள்ளனர். 

குறித்த பகுதியில் காணப்படும் வீதி வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள்  வீதியை விட்டு விலகியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் 18 வயது மதிக்கதக்க இரு இளைஞர்கள் பலியாகியதுடன், 20 வயதுடைய மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞனை மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் கிளிநொச்சி காந்திகிராமம் பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய  இளைஞரே படுகாயமடைந்துள்ளார். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.