பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலேகொட பகுதியில் செவ்வாய்க்கிழமை களுத்துறை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனை  நடவடிக்கைகளின் போது துப்பாக்கி மற்றும் 2 வாள்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரஜவத்த மற்றும் கித்துலாவ பகுதிகளைச் சேர்ந்த 18,22 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மல்லாவி - ஆலங்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 2 துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.