அரச போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் கைது

Published By: Digital Desk 4

19 Aug, 2020 | 05:55 PM
image

இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து  ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றைய தினம்  புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

மன்னார் போக்குவரத்து சாலையின் பின் பகுதியில் வைத்து இலஞ்சம் பெற்ற போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

 இலங்கை அரச போக்குவரத்து சேவையின்  வட பிராந்திய முகாமையாளர், நபர் ஒருவரிடம் முறைப்பாடு ஒன்றை சீர் செய்வதற்கென 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்ற நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சேவையின்  வட பிராந்திய முகாமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன்  மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விசாரணைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-11-09 06:02:04
news-image

ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்...

2025-11-08 17:03:53
news-image

6 வருடங்களாக  மலசலகழிவுகளை அகற்றும் வாகனம்...

2025-11-08 20:32:03
news-image

வரவு - செலவு திட்டத்தில் பாரிய...

2025-11-08 13:51:57
news-image

இலங்கையின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை வெளிக்கொணரும் ”FOOTPRINT”...

2025-11-08 16:26:12
news-image

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக...

2025-11-08 15:34:19
news-image

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-11-08 16:05:19
news-image

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர்...

2025-11-08 17:09:32
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05