நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசி வருகின்றமையினால் வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கடற்பரப்பில் நிலைகொள்ளும் காற்றின் வேகம் அதிகரித்துவருவதால் அதன் தாக்கத்தை தெற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத் துள்ளது.

குறிப்பாக மலையகப் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதுடன் மணிக்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

இதேவேளை காற்றின் தாழமுக்கம் நாளையுடன் குறைவடையலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.