அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மஞ்சளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பயிர்ச்செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மஞ்சள் பற்றாக்குறை காரணமாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் கலந்தாலோசித்து இதற்கான திட்டம் தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறினா.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக கடத்தப்படும் மஞ்சள்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்யும் சம்பவங்களும் அண்மைய காலங்களில் அதிகளவில் பதிவாகியுள்ளன.