பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஒருவர் பலி

Published By: Digital Desk 3

19 Aug, 2020 | 10:41 AM
image

மத்திய பிலிப்பைன்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நிலநடுத்தால் பலர் காயமடைந்துள்ளதோடு வீடுகள் சேதமாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் ஒரு துறைமுகம் சேதமடைந்துள்ளது.

கடலோர நகரமான கேடிங்கனில் மூன்று மாடி வீடு இடிந்து விழுந்துள்ளது.

ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார். 

நிலநடுக்கத்தால் மஸ்பேட் மாகாணத்தில் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அனர்த்த நிலையம்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேடிங்கனில் சேதமடைந்த இரண்டு அரசாங்க கட்டிடங்களில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட 100 க்கும் மேற்பட்டோர் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் கேடிங்கன் நகரத்தில் இருந்து சுமார் 21 கிலோமீற்றர் தொலைவில் 6.6 ரிச்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில நடுக்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய விசயாஸ் பகுதி முழுவதும் உள்ள  பல மாகாணங்களில் இது உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் பிலிப்பைன்ஸ் உள்ளதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல்களால் தாக்கப்படுகிறது. இது உலகின் மிக பேரழிவுக்குள்ளான நாடுகளில் ஒன்றாகும்.

1990 இல் வடக்கு பிலிப்பைன்ஸில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 2,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆபாச வார்த்தை பேசினால் அபராதம்...!

2026-04-12 11:26:56
news-image

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி...

2026-04-12 10:36:35
news-image

அமெரிக்காவின் எதிர்ப்பால் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை...

2026-04-12 10:22:00
news-image

ஹெய்ட்டியில் சனநெரிசலில் சிக்கி 30 பேர்...

2026-04-12 09:42:50
news-image

அமெரிக்கா–ஈரான் 14 மணி நேர பேச்சுவார்த்தை...

2026-04-12 07:04:54
news-image

பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பும்: பாகிஸ்தான் பிரதமர்...

2026-04-12 00:02:11
news-image

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா...

2026-04-11 18:40:49
news-image

போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி : பேஸ்புக்,...

2026-04-11 17:59:18
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமரை...

2026-04-11 17:37:56
news-image

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்...

2026-04-11 18:16:49
news-image

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா...

2026-04-11 15:39:27
news-image

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு...

2026-04-11 14:21:09