(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக சைபிரஸ் நாட்டிற்கு தொழில் நிமித்தம் செல்லும் செல்லவிருக்கும் வெளிநாட்டவர்கள் தமக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டிய பிரதானமான 4 விடயங்களை அறிவித்திருக்கிறது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இன்று செவ்வாய்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டு அதில் தெரிவித்திருப்பதாவது,

அதற்கமைய குறித்த ஆவணத்தில் பரிசோதனைக்காக மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்ட தினம் , பரிசோதனை அறிக்கை முறைமை (PT - PCR ஆக காணப்பட வேண்டும்) , கோரிக்கையாளரின் பெயர் மற்றும் பரிசோதனையின் முடிவு என்பன உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

PT - PCR பரிசோதனை தவிர வேறு பரிசோதனை அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அத்தோடு மேற்கூறிய 4 விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.