தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் - சித்தார்த்தன்

18 Aug, 2020 | 05:37 PM
image

தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் ஒரணியில் செயற்படாது விட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ்தேசிய கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள்  தீர்ப்பு  ஒன்று வழங்கியுள்ளார்கள். அதனை ஏற்க வேண்டும்  அரச தரப்பிற்கும் தமிழ்தேசிய தரப்பிற்கும் தமது தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்  தேர்தல் முடிவுகளை வைத்து  பசில்ராஜபஷ்சவும்  அமைச்சர்களும்  தமிழ்மக்கள் கணிசமான ஆதரவு எமக்கு தந்துள்ளார்கள் என கூறுகின்றார்கள் இது நல்ல அறிகுறி இல்லை சர்வதேச ரீதியில்  இனப்படுகொலைக்கான நிதி,யுத்தக் குற்ற விசாரணை போன்ற விடயங்களை மேற்கொண்டு செல்வதற்கு முடியாத சூழல் உருவாகியுள்ளது விசாரணை தேவை எனக்கூறும் போது மக்கள் ஆதரவு எமக்கு உள்ளது என்ற கருத்து அரசதரப்பால் முன்வைக்கப்படுகின்ற சூழல் உருவாகும்.

இவ்வாறான சூழல் உருவாகின்ற போது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ன செய்ய போகிறார்கள் என்பதே அடுத்த கட்ட தேவையும்  நடவடிக்கையுமாக உள்ளது.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டு தமிழ்தேசிய பரப்பில் செயற்படுகின்ற கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது கட்டாயமான தேவை.

 ஆனால் ஏற்கனவே கட்சிகளுக்குள் பிரச்சினை உருவாகியுள்ளது    தமிழ் தேசியக் கட்சிகளுக்குள்  பிரச்சினை என்பது தமிழ் தேசிய உணர்வாளர்களுக்குள்  மனக்கசப்பைகுள்ளாகியிருக்கின்றது.  ஏற்கனவே    தமிழ்தேசிய  கூட்டமைப்பிற்குள் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளது. குறிப்பாக கூட்டமைப்பு என கூறி கொண்டு தனி நபர் அல்லது தனி கட்சி தனித்து முடிவெடுப்பது  தனித்து  தீர்மானம் எடுப்பது போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.

  ஒரு முடிவினை எடுப்பதானால் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து கதைத்து  பேசி முடிவுகளை எடுக்க வேண்டும் கடந்த காலங்களில் தன்னிச்சையாக  முடிவேடுத்தமையே கூட்டமைப்பின்  இன்றைய   பின்னடைவுக்கு  காரணம்  இதனை முதலில் உணர வேண்டும். இனிவரும் காலத்திலாவது மக்களின் நிலையை உணர்ந்து  கூட்டமைப்பை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் இத்தகைய பிழைகளை விடாது பங்காளிக் கட்சிகளுடன் புரிந்துணர்வுடன்  கலந்துரையாடி முடிவுகளை எடுக்க வேண்டும்.

 தேர்தலுக்கு பின்னரான தமிழ்தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகளுக்குள்  பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்மையால் பாராளுமன்றம் சென்று எவ்வாறு ஒற்றுமையாக செயற்படுவார்கள் என்ற குழப்பம் பலரிடத்திலும் உருவாகியுள்ளது. 

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணவேண்டும் எமக்கு வாக்களிக்காது தேசிய உணர்விலிருந்து  வேறுகட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் தமது நலனை கருத்தில் எடுக்காது செயற்பட்டாலும் நீண்டகாலமாக தமிழ்தேசிய பரப்பில் செயற்பட்டு வரும் நாம் இனப்பிரச்சினை தீர்வுக்காக நியாயமாகவும் ஒற்றுமையாகவும் செயற்பட தயாராகவுள்ளோம். எனைய தமிழ் தேசிய பரப்பில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் ஒரணியில் திரளாது விட்டாலும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதே அடுத்தகட்ட தேவையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58