(நா.தனுஜா)
குருணாகலையில் தொல்பொருள் முக்கியத்துமுடைய கட்டடமொன்று உடைக்கப்பட்ட விவகாரத்தில் குருணாகலை மாநகரசபை மேயருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான சட்டச்செலவுகளை மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்வதற்கான தீர்மானம் குருணாகலை மா நகரசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
வீதிப்புனரமைப்புப் பணிகளுக்காக 13 ஆம் நூற்றாண்டிற்குரிய இரண்டாம் புவனேகபாகுவின் அரச மண்டபம் உடைக்கப்பட்ட விவகாரத்தில் குருணாகலை மாநகரசபை மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்டங்கலாக ஐவரைக் கைது செய்யுமாறு குருணாகலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கான செலவுகளை மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை நேற்று குருணாகலை மாநகரசபை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த யோசனைக்கு ஆதரவாக 13 உறுப்பினர்களும் எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களித்திருக்கின்றார்கள்.
வழக்கு விசாரணைச் செலவுகளை மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுப்பதற்கு எதிராக வாக்களித்த 3 உறுப்பினர்களில் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியையும், மற்றையவர் மக்கள் விடுதலை முன்னணியையும் சேர்ந்தவர் என்பதுடன் மூன்றாவது நபர் குருணாகலை மாநகரசபையின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM