(இராஜதுரை ஹஷான்)
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம், நிர்வாகம், பாதுகாப்பு, தொழினுட்பத்துறை விருத்தி உட்பட பல்துறைசார் துறைகளின் முன்னேற்றத்திற்கு அமெரிக்கா ஒத்துழைப்புடன் செயற்படும். புதிய அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்பட தயாராக உள்ளோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடுகையில் தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அச்சந்திப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனநாயக மற்றும் அமைதியான சூழலில் பொதுத்தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ளது புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்தினை தெரிவித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பூகோளிய மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை இலங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கதுடன் அவதானத்துக்குரியது என தூதுவர் தெரிவித்தார்.
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தூதுவரிடம் தெரிவித்தார். தனியார் தொழிற்துறையை மேம்படுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்க ஒத்துழைப்பு வழங்கும் என தூதுவர் இதன் போது குறிப்பிட்டார்.
இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக நாடு தழுவிய ரீதியில் தொழிற்துறை பயிற்சி மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க ஐக்கியஅமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கியமை வரவேற்கத்தக்கது. படித்த இளைஞர் யுவதிகள் இலகுவில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு இனிவரும் காலங்களிலும் புதிய செயற்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என தூதுவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM