(எம்.மனோசித்ரா)
தேசிய மின் கட்டமைப்புக்கு நுரைச்சோலை - லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை வழங்குவதற்கு 4 - 5 நாட்கள் செல்லும் என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் பல மணித்தியாலங்கள் மின்துண்டிப்பும் அதன் காரணமாக நீர் விநியோகத் தடையும் ஏற்பட்டிருந்தது.
மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் இவ்வாறு மின்விநியோகத்தடங்கல் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு கூறிய சுலக்ஷன ஜயவர்தன மேலும் குறிப்பிடுகையில் ,
லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இவ்வாறான நிலைமை ஏற்பட்டது.
இதனை நிவர்த்தி செய்யும் முயற்சியில் மின்சாரத்துறை பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்த போதிலும் இதனை சீர்செய்வதற்கு 4 - 5 நாட்களேனும் செல்லும் என்று எதிர்பார்க்கின்றோம். எவ்வாறிருப்பினும் மீண்டும் இது போன்று தடங்கல் ஏற்படாமல் மின்சாரத்தை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவிக்கையில் ,
மின்விநியோகத் தடங்கல் தொடர்பில் அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினாலும் இலங்கை மின்சார சபையினாலும் ஆராயப்பட்டு வருகிறது. இவற்றின் நிறைவிலேயே சரியான காரணத்தைக் கூற முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM