தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம்கபாலி’.

இப்படத்தில் ரஜினியின் லுக் மற்றும் அவரது ஸ்டைல் இந்த படத்தை பார்க்க ஒவ்வொவருக்கும் பெரிய ஆவலை தூண்டியுள்ளது

கலைப்புலி தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 22ஆம் திகதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇப்படத்திற்கு நேற்று சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இப்படத்தைப் பார்த்து எந்த ஆட்சேபமும் தெரிவிக்காமல்யுசான்றிதழ் வழங்கியுள்ளனர்.இது படக்குழுவினரை உற்சாகமடையச் செய்துள்ளது