(செய்திப்பிரிவு)

மாஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய - அநுராதபுரம் வீதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவித்தனர்.

அநுராதபுரம் நோக்கி சென்ற ஜீப்பொன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த ஜீப்பின் சாரதி தூக்கக் கலக்கத்தில் வாகனம் செலுத்தியமையே விபத்துக்கான காரணமென பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த ஜீப்பின் சாரதி மற்றும் முன்னாலிருந்து பயணித்த பெண் இருவரும் மாஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அநுராதபுரம் - பட்டுமக பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண்ணொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.