ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் பொலிஸாரால் நேற்று(17.08.2020) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞன் ஒருவரை வழிமறித்துள்ளனர். குறித்த இளைஞனை பொலிஸார் சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 60 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஏற்கெனவே கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும் தற்போது மீண்டும் அவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த அதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.