பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைக்கப்பட்ட 13 அதிகாரிகளுக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை, போதைப்பொருள் மோசடிகளுக்காக மீண்டும் விற்பனை செய்த குற்றச்சாட்டுக்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் இன்றைய தினம் அவர்களை மீண்டும் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களுக்கான விளக்கமறியல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

இந்த உத்தரவை கொழும்பு நீதிவான் நீதிமன்ற தலைமை நீதிபதி லங்கா ஜயரட்ன பிறப்பித்தார்.