Published by T. Saranya on 2020-08-19 13:29:04
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியிலுள்ள மரணப் பள்ளத்தாக்கு எனப்படும் பாலைவனத்தில் 130 டிகிரி பரனைட் (54.4 செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
இது மரணப்பள்ளத்தாக்கின் ஃபர்னஸ் க்ரீக்கில் மரணப் பள்ளத்தாக்கின் ஃபர்னேஸ் க்ரீக் எனும் இடத்தில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதுவரை பூமியில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையில் இதுவே அதிகபட்சமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியின் வெப்பநிலை இந்த வாரத்தில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பூமியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 129.2 டிகிரி பரனைட் (54 டிகிரி செல்சியஸ்) ஆகும்.
இதுவும் 2013 ஆம் ஆண்டு மரணப் பள்ளத்தாக்கில் தான் பதிவு செய்யப்பட்டது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக மரணப் பள்ளத்தாக்கில் 134 டிகிரி பரனைட் (56.6 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் உள்ளன.