பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைக்கப்பட்ட 13 அதிகாரிகளும் இன்று மீண்டும் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை, போதைப்பொருள் மோசடிகளுக்காக மீண்டும் விற்பனை செய்த குற்றச்சாட்டுக்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினரை இன்று வரை விளக்கமறியலில் தொடர்ந்து வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் லங்கா ஜயரட்ன கடந்த 04 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் காண்காணிப்பாளர் அனுருத்த சம்பாயோ உட்பட நால்வரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சிறைக் கைதிகள் குழுவுக்கு சிறப்பு வசதிகளை வழங்கியதற்காகவும், குற்றவாளிகளின் இடமாற்றங்களுக்கு உதவுவதற்கும், குற்றச் செயல்களைத் தொடர உதவுவதற்கும் ஆவணங்களை மோசடி செய்த குற்றச்சாட்டுக்காகவும் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.