திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 17 கள்ள நோட்டுகளை வைத்திருந்த ஒருவரை இம் மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(17) உத்தரவிட்டார்.

சிங்கபுர, தம்பலாகாமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மூதூர் பகுதியிலுள்ள சில்லறைக் கடையொன்றில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டினை மாற்ற முற்பட்ட போது கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து சந்தேக நபரை கையில் பிடித்தவாறு மூதூர் பொலிஸாருக்கு கடை உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து சோதனை மேற்கொண்ட போதே ஆயிரம் ரூபாய் உடைய 17 திருட்டு நோட்டுகளும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு மூதூர்  நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.