நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையையடுத்து பல பிரதேசங்களில் நீர் விநியோகத் தடையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை, கெரவலபிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்தின் மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டில் பல மணி நேர மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பல பிரதேசங்களில் நீர் விநியோக நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் மின்சார துண்டிப்பு இன்னும் சில மணி நேரங்களில் சீர் செய்யப்படும் எனவும் மின்சார நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்ப இரவு 8 ஆகும் எனவும் மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று பகல் வேளையில் இருந்து நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சார துண்டிப்பால் நகரங்களில் வீதி சமிக்ஞைகள் செயலிழந்துள்ளதால் நகரங்களில் கடும் வாகன நெரிசல் நிலவுகின்றது.

மின்சார துண்டிப்பை சீர் செய்யும் நடவடிக்கையில் இலங்கை  மின்சார சபை பொறியியலாளர்கள் தற்போதும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,  தென் மாகாணம் மற்றும் கொத்மலையின் சில பிரதேசங்களில் மின்சார துண்டிப்பு வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.