சுயேட்சை குளுக்களிளும் வேரு வேரு கட்சிகளில் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்காமல் ஒன்றாக ஓர் அணியாக இனைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவர்   சமன் குமார  தெரிவித்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் பிரிந்து தனித்தனியாக வாக்கு சேகரிக்க சென்றதன் விளைவாக இலங்கை முழுவதும் உள்ள மாவட்டங்களில் தமிழ் பிரதிநித்துவம் கடும் பாதிப்பிற்குள்ளானது.

அதனை கருத்தில் கொண்டு எதிர் வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக ஓர் அணியாக இனைய வேண்டும் என்று புதிய ஜனநாயக்கள் முன்னணி  அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

காலம் கடந்து ஞானம் பிறப்பதைவிட நடந்து முடிந்த  பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளை மனதுக்கு எடுத்துக்கொன்று தமிழ் கட்சிகள் தமிழ் பேசும் மக்களின் வெற்றிக்காகவும் தமிழ் பேசம் மக்களின் எதிகாலத்தையும்  நினைத்து  ஒன்றாக ஓர் அணியாக சேர வேண்டும்  இது எமது தமிழ் சமுதாயத்தின் வேண்டுகோல் என்றும் அவர் குறிப்பிட்டார்