அடுத்த ஆண்டு  இங்கிலாந்தில் நடைபெறவுள்ள  ‘தி ஹண்ட்ரட்’ தொடரில்  மஹேந்திர சிங் தோனி விளையாட வேண்டும் என ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெற்றுள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பி.சி.சி.ஐ.யின் விதிப்படி  டி20  லீக் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றால், சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடத்தவுள்ள  100 பந்துகள் கொண்ட ‘தி ஹண்ட்ரட்’ எனும் கிரிக்கெட் லீக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதலாவது சீசன் அடுத்த ஆண்டு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன் லண்டன் ஸ்பிரிட் அணியின் பயிற்றுநராகவுள்ளார்.இந்நிலையில் ஓய்வு பெற்ற தோனி, ‘தி ஹண்ட்ரட் ‘லீக்கில் எங்கள் அணிக்காக விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷேன் வோர்ன் கூறுகையில், ‘‘அடுத்த  ஆண்டு லண்டன் ஸ்பிரிட் அணிக்கு தோனியை அழைத்து வர முடியும் என்றால் ஆச்சரியம் அடைவேன்.

அவர் லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாட விரும்பினால், நான் நிச்சியம் அவரை அழைத்து வருவேன். நான் அதற்கான பணத்தை தேடுவேன்’’என்றார்.

டி20 கிரிக்கெட்டில் குறிப்பாக தலைவர் பதவியில் அவரது அணி இறுதிச் சுற்றை சுற்றியே வந்துள்ளது. 

அவரது தலைமையில் மூன்று  உலகக் கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றுள்ளது.

அவர் ஒரு அபாயகரமான வீரர். பெரும்பாலான போட்டிகளில் ஒரு தனி மனிதராக அணியியை வெற்றி பெற வைத்துள்ளார். 

அவருடைய தலைமைத்துவத்தை பார்த்தீர்கள் என்றால், சிறந்த போட்டியாளராகவும், சிறந்த வீரராகவும் திகழ்ந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த விக்கெட்காப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார்’’ என்றார்.