இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவான 'ராட்சசன்' என்ற தமிழ் திரைப்படம், திரையுலகில் பிரபலமான ஐஎம்டிபி இணையதளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது.
இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், அமலாபால், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில், 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் 'ராட்சசன்'. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இந்தப் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஐஎம்டிபி இணையதளத்தில் சிறந்த தமிழ் படங்களுக்கான அதிக புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை ‘ராட்சசன்‘ பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து விக்ரம் வேதா, நாயகன், அன்பே சிவம், பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலான சிறந்த படங்களின் பட்டியலில் 'ராட்சசன்' படத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. இதற்கு முன் பதேர் பாஞ்சாலி, கோல்மால் ஆகிய படங்கள் முதல் இரண்டு இடங்களை பெற்றிருக்கிறது. அகில இந்திய அளவிலும், தமிழ் திரையுலகிலும் சாதனை படைத்த 'ராட்சசன்' படம் குறித்து அப்படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து, தங்களது இணையப்பக்கத்தில் இது குறித்த செய்திகளை பதிவிட்டிருக்கிறார்கள்.
இதனிடையே இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றியை பெற்றது என்பதும், விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM