தீகவாபியில் அமைந்துள்ள இயற்கை மூலிகை தோட்டத்திணை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

 தீகவாபி விகாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தீகவாபியில் அமைந்துள்ள மூலிகைத்தோட்டமானது புனித வரலாற்றை கொண்டது. இங்குள்ள அதிக மருத்துவ மதிப்பு கொண்ட பல மருத்துவ தாவரங்கள், அழிந்து செல்வது தடுக்கப்படவேண்டும். சுதேச மருத்துவ தேவைக்கான இந்த மரங்கள்-கொடிகள் பாதுகாக்கப்படவேண்டியது மிகமுக்கியமானது.

மூலிகை தோட்டங்களானது எதிர்கால தலைமுறைக்காக நாம் விட்டுச் செல்லும் விலைமதிப்பற்ற பொருளாக இருக்கும். ஆகவே இப்புனித பூமியில் உள்ள மூலிகை தோட்டங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.