(எம்.எம்.சில்வெஸ்டர்)
இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவான 225 பேரில் 9 பேர் நாட்டின் தேசிய விளையாட்டாக விளங்கும் கரப்பந்தாட்ட விளையாட்டுக்கு மிகவும் தொடர்புடையவர்களாக திகழ்கின்றனர்.
இந்த 9 பேரும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளன அங்கத்தவர்கள் என்பதுடன் இலங்கை கரப்பந்தாட்டத்துக்கு பாரிய சேவைகளை செய்துள்ளடதுடன் தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.
இவர்களில் பதுளை மாவட்டத்திலிருந்து தெரிவான டிலான் பெரேரா, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக பல ஆண்டுகள் சேவையாற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் வர்ண விருதை வென்றவரும், தற்போது இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவருமாக கடமையாற்றும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இம்முறை கேகாலை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.
நுவரெலியா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பழனி திகாம்பரம் கரப்பந்தாட்ட வீரர் என்பதுடன், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் நீண்ட கால அங்கத்தவருமாவார். இவர் கரப்பாந்தாட்ட விளையாட்டில் அதீத ஆர்வமிக்கவராகவும் உள்ளார்.
கம்பஹா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, மற்றும் நிமல் லான்சா ஆகிய இருவரும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளன உப தலைவர்களாக செயற்பட்டவர்களாவர்.
இதில் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பாடசாலைக்காலத்தில் மற்றும் வைத்திய படிப்பின்போதும் சிறந்த கரப்பந்தாட்ட வீராங்கனையாக திகழ்ந்தவராவார்.
இம்முறை குருணாகல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான சாந்த பண்டார, இலங்கை கரப்பந்தாடட்ட சம்மேளனத்தின் உபதலைவராக கடமையாற்றி கரப்பந்தாட்டத்துக்கு சிறந்த சேவையையாற்றியுள்ளார்.
இவர்களைத் தவிர கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான திலும் அமுனுகம, களுத்துறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான பியால் நிசாந்த, மாத்தறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான வீரசுமன திசாநாயக்க ஆகியோரும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் நீண்டகால அங்கத்தவர்களாவர்.
இலங்கை பாடசாலை விளையாட்டு வரலாற்றில் 6000 க்கும் அதிகமான பாடசாலை அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு விளையாட்டாக திகழ்வது கரப்பந்தாட்டம் ஒன்றேயாகும்.
ஆகவே, நாட்டின் தேசிய விளையாட்டாகத் திகழும் கரப்பந்தாட்டம் இனிவரும் காலங்களில் பாரிய எழுச்சியைப் பெற வேண்டும் என்பது கரப்பந்தாட்ட பிரியர்களின் மாபெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM