(எம்.எம்.மின்ஹாஜ்)
பருப்பு ,சீனி உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்களுக்கான வற்வரியில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இந்த சலுகையை தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் ஊடாக வழங்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் நாளைய தினம் அமைச்சரவையில் ஆலோசனை செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும் வற் வரி குறைப்புகள் செய்யாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதிநிதித்துவத்தை வழங்கும் நிகழ்வு இன்று மாலை மருதானையில் நடைபெற்றது .இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் காலப்பகுதியின் போது அத்தியாவசிய பொருட்களில் விலையினை குறைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தோம். எனினும் குறைக்கப்பட்ட அடிப்படையில் மக்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை. இந்த விடயத்தில் வர்த்தகர்கள் மக்களை ஏமாற்றும் வகையில் நடந்துகொண்டனர்.
இந்நிலையில் தற்போது நாட்டின் கடன் சுமையை போக்குவதற்கான வற்வரி அதிகரிப்பினை செய்தோம். ஆனாலும் இதற்கு மக்களின் எதிர்ப்பு வெளியிட தொடங்கியுள்ளது.
எவ்வாறாயினும் மீளவும் மக்களுக்கான சலுகையை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்பிரகாரம் அத்தியாவசிய பொருட்களுக்காக வற் வரி விதிப்பில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்படி 15 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும். இது தொடர்பில் நாளைய அமைச்சரவையின் போது ஆராய்ந்து தீர்மானம் எடுக்கவுள்ளோம்.
மேலும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் விசேட உரையும் நிகழ்த்தவுள்ளார்.
மேலும் வற் வரி குறைப்புகள் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் மக்களுக்கு உரிய சலுகைகளை வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM