சோமாலியாவில் ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து அல்-ஷபாபினர் மூர்க்கத்தனமான தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு

By Vishnu

17 Aug, 2020 | 09:30 AM
image

சோமாலியத் தலைநகரில் அமைந்துள்ள உயர் மட்ட ஹோட்டல் ஒன்றில் அல்-ஷபாப் ஆயுதக் குழுவினர் நடத்திய துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த தாக்குதலினால் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்கொலை கார் குண்டுவெடிப்புடன் தொடங்கிய அல்-ஷபாப் குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் சுமார் மூன்று மணி நேரம் பரஸ்ரப துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் முக்தார் உமர் தெரிவித்துள்ளார்.

பலியான 12 பேரில் இரண்டு அரச ஊழியர்கள், மூன்று ஹோட்டல் பாதுகாப்பு காவலர்கள், நான்கு பொதுமக்கள் மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் உள்ளனர் என்று பொலிஸ் அதிகாரி அஹமட் பஷானே சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தாக்குதல் நடத்திய நான்கு பேரும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக முக்தார் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

ஹேட்டலின் பாதுகாப்பு வாயில்களில்  சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பால் தாக்குதல் தொடங்கியது, பின்னர், துப்பாக்கி ஏந்தியவர்கள் ஹோட்டல் உள்ளே நுழைந்து பிணைக் கைதிகளை அழைத்துச் சென்றனர், பெரும்பாலும் அங்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

தாக்குதல் தொடங்கியபோது மின் தடை ஏற்பட்ட பகுதியில் ஆம்புலன்ஸ் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில்...

2022-12-08 22:18:00
news-image

2022 இன் சிறந்த நபர் -...

2022-12-08 15:53:38
news-image

ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு...

2022-12-08 14:06:43
news-image

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் எழுச்சி

2022-12-08 13:03:39
news-image

குஜராத்தில் ஏழாவது முறையாக பாஜக வெற்றி

2022-12-08 12:54:27
news-image

சைபர் தாக்குதல் - இரண்டாம் உலக...

2022-12-08 12:44:14
news-image

குஜராத்தில் பாஜக, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ்...

2022-12-08 12:59:04
news-image

பாலி குண்டுவெடிப்பு குற்றவாளி விடுதலை -...

2022-12-08 12:25:50
news-image

இந்திய விமானப்படையில் புதிய ஏவுகணை கட்டமைப்புடன்...

2022-12-08 13:42:48
news-image

2021-22 இல் இந்தியா 84.84 பில்லியன்...

2022-12-08 13:42:00
news-image

ரஷ்ய எண்ணெய் விலை வரம்பு :...

2022-12-08 13:40:58
news-image

ரயில் பாதை நடுவே சிக்கிக்கொண்ட மாணவி...

2022-12-08 11:54:06