(செ.தேன்மொழி)
மிரிஸ்ஸ பகுதியில் மீன்பிடி தொழிலுக்காக அழைத்துச் சென்ற சிறுவனை கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மிரிஸ்ஸ பகுதியில் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற படகு ஒன்றில் , மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்காக 16 வயதுடைய சிறுவனொருவனும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் , அந்த படகு கடந்த 12 ஆம் திகதியே மீண்டும் கரைதிரும்பியுள்ளது.
இதன்போது படகில் அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் 64 வயதுடைய படகின் உரிமையாளரையும் , மேலும் இருவரையும் ஏற்கனவே கைது செய்திருந்ததுடன் , இந்த விவகாரம் தொடர்பில் மேலும் இருவரை கைது செய்ய வேண்டியிருப்பதாகவும் , அவர்கள் தொடர்பில் தகவலை பெற்றுக் கொடுக்குமாறு பொது மக்களிடமும் உதவிக் கோரியிருந்தனர்.
அதற்கமைய குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் ஐவரும் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பந்தப்பட்ட சிறுவன் மீன்பிடியில் ஈடுபட்ட போது அவன் பிடித்த மீணை தவறவிட்டதன் காரணமாக , படகிலிருந்த ஏனைய மீனவர்கள் அவரை துன்புரித்தியதாகவும் , இதன் போது குறித்த சிறுவனை தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்துள்ளதாகவும் சிறுவன் வாக்கு மூலம் வழங்கியுள்ளதுடன் , அவனை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தியதாகவும் சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும், அது தொடர்பான வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்யட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
இதேவேளை இதன்போது கைது செய்யப்பட்ட படகின் உரிமையாளர் இது போன்று சிறுவர்களை இவ்வாறு ஆழ்கடலுக்கு அனுப்பி மீன்பிடியில் ஈடுபடுத்தி பணம் சேமித்துள்ளாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், அவ்வாறு பணம் பெற்றுக் கொண்டிருந்தால் அந்த பணத்தை கறுப்புபண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM