(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை முதல் திறக்கப்படவுள்ளன. இதன் போது பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய, பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் முன்னெடுக்கப்படும். இன்று முதல் அனைத்து பீடங்களினதும் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகளை சுகாதார தரப்பினர் வழங்கியுள்ளனர்.
அதற்கு தேவையான நடவடிக்கைகைள எடுப்பதற்கு துணை வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பல்கலைக்கழக விடுதிகளில் அறையொன்றில் தங்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய எந்தவொரு தடையுமின்றி மாணவர்கள் வழமை போன்று விடுதியில் தங்கலாம். குறித்த விடுதியின் அறையில் தங்கும் மாணவர்கள் குறிப்பிட்ட வருடத்தை சேர்ந்த மாணவர் குழுவாக இருக்கவேண்டும். ஏனைய ஆண்டு மாணவர்களை கலப்பாக இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
விடுதிகளுக்கு வருகை தரும் விருந்தினர்களை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வருபவர்களின் பெயர் விபரங்களை பெற்றுக் கொள்ளுமாறும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM