இரு கடைகள் உடைத்து ஒரு இலட்சம் ரூபாய் பணம் திருட்டு

Published By: Digital Desk 4

16 Aug, 2020 | 11:23 AM
image

வவுனியா வைரவபுளியங்குளம் சந்தியில் அமைந்துள்ள  வியாபார நிலையங்களிற்குள் நேற்றைய தினம் உள்நுளைந்த திருடர்கள் அங்கிருந்து பணத்தையும் பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர்.

நேற்றையதினம் இரவு வியாபார நிலையங்களை மூடிவிட்டுசென்ற  அதன் உரிமையாளர்கள் இன்று காலை மீண்டும் அதனை திறக்க‌ முற்பட்ட போது கதவினை உடைத்து பொருட்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத்தடுப்பு பொலிசார் சீசிரீவி வீடியோ உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் தொடர்பாடல் நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணமும், தொலைபேசி அட்டைகளும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிசாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார். அத்துடன் அதற்கு அருகாமையில் இருந்து வர்ணப்பூச்சு விற்பனை நிலையம் ஒன்றை உடைத்த திருடர்கள் அங்கிருந்து பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர்.

இதேவேளை அதேபகுதியில் அமைந்திருந்த மற்றொரு  வியாபார நிலையத்தின் (சலூன்) கதவும் உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொருட்கள் எவையும் திருடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41