'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', ' புதுப்பேட்டை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் செல்வராகவன், 'சாணிக் காயிதம்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
விரைவில் வெளியாகவிருக்கும் 'ராக்கி' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராக இருக்கும் 'சாணிக் காயிதம்' என்ற படத்தில் கதையின் நாயகனாக இயக்குனர் செல்வராகவன் அறிமுகமாகிறார். சூர்யா நடிப்பில் வெளியான 'என் ஜி கே' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் செல்வராகவன், அடுத்ததாக 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் 'சாணிக் காயிதம்' என்ற படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகமாகவிருக்கிறார். இந்தப்படத்தில் இவருடன் முன்னணி இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பேசுகையில்,' கிராமிய பின்னணியிலான கிரைம் திரில்லர் ஜேனரில் உருவாகும் இந்த படத்தில் செல்வராகவனும், நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள். ஆனால் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா? இல்லையா? என்பதை தற்போது கூற இயலாது.' என்றார்.
நடிகர் தனுஷின் மூத்த சகோதரரான செல்வராகவன், தொடர்ந்து இயக்குனராக பயணிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 'சாணிக் காயிதம்' மூலம் நடிகராகவும் அறிமுகமாவதால் தனுஷின் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM