இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

தோனியின் ஓய்வு முடிவு பற்றிய இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர்ந்த ரெய்னா, தன்னுடைய ஓய்வு முடிவையும் அதில் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா இறுதியாக கடந்த 2018-இல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார். 

இவ்வாறு சுரேஷ் ரெய்னா, தோனியுடன் இணைந்து ஓய்வு முடிவை அறிவித்திருப்பது கிரிக்கெட் உலகை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் பயிற்சிக்காக சுரேஷ் ரெய்னாவும், தோனியும் நேற்றையதினம் சென்னை வந்துள்ள நிலையில், இவ்வாறு ஓய்வு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.