இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில்  இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவரும் இந்திய அணிக்கு இரு முறை உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்தவருமான மகேந்திர சிங் தோனி சர்வசே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டர் கிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மகேந்திர தோனி உள்ளார்.

ஏற்கெனவே, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய நிலையில், தற்போது அவர் அனைத்துவகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.