மாவையுடன் முரண்பாடில்லை ஒன்றாகவே கலந்துரையாடலில் பங்கேற்றோம்: சுமந்திரன்

Published By: Digital Desk 3

15 Aug, 2020 | 01:17 PM
image

(ஆர்.ராம்)

மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும் எனக்கும் இடையில் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லை. நாம் இருவரும் ஒன்றாகவே இருந்து கலந்துரையாடலிலும் பங்கேற்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழில் நேற்று முன்தினம் இரவு குடாநாட்டின் முக்கிய வைத்தியர்களைக் கொண்ட குழுவொன்று ஏற்பாடு செய்த கலந்துரையாடலொன்று வைத்தியர் ஒருவரின் விடுதியில் நடைபெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி:- தங்களையும், கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவையும் சமரசப்படுத்தவற்காக ஏற்பாடொன்றை வைத்தியர்கள் குழுவொன்று மேற்கொண்டிருந்ததா?

பதில்:- எனக்கும், மாவை.சேனாதிராஜாவுக்கும் முரண்பாடே இல்லை. அப்படியிருக்கின்றபோது எதற்காக சமரசம் பேசப்பட வேண்டும். 

கேள்வி:- அப்படியென்றால் நீங்களும், மாவை.சேனாதிராஜாவும் பங்கேற்ற கலந்துரையாடலொன்று நடைபெறவில்லையா?

பதில்:- நடைபெற்றது.

கேள்வி:- அதில் எவ்விதமான விடயங்களை பேசினீர்கள் என்று கூறமுடியுமா?

பதில்:- குடாநாட்டின் சில வைத்தியர்கள் எமது கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாட விரும்பியிருந்தனர். அவர்கள் என்னையும், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜாவையும் அழைத்திருந்தனர். நாம் இருவரும் சென்றிருந்தோம். ஒன்றாகவே அந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தோம்.

வைத்தியர்கள் பல்விதமான கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கான தெளிவு படுத்தல்களை நானும், சேனாதிராஜாவும் வழங்கியிருந்தோம். அத்துடன் அவர்களின் சில யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. அவற்றையும் நாம் செவிமடுத்திருந்தோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06