அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகின்றார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில் இதில் முக்கியத்துவமிக்க விடயம் யாதெனில் துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் பெண் கமலா ஹரிஸ் போட்டியிடுவதாகும்.
55 வயதாகும் கமலா ஹரிஷின் தாயார் இந்தியாவைச் சேர்ந்தவர். தந்தை ஜமேக்காவைச் சேர்ந்தவர். இந்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமை அவரைச் சார்கிறது.
1964 ஆம் ஆண்டு ஆக்லண்டில் பிறந்த கமலா ஹாரிஸ். இவரது தாயாரான சியாமளா கோபாலன் ஹரிஸ் மார்பகப்புற்றுநோய் விஞ்ஞானி, தந்தையான டொனால்ட் ஹரிஸ் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
கமலா ஹரிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்த பின்னர், சான்பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் பணிபுரிந்தார். 2011 இல் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக நியமனம் பெற்றார். இதன்மூலம் குறித்த பதவிக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமைக்கு ஆளானார்.
2017 இல் கலிபோர்னியாவிலிருந்து செனட்டராக பதவியேற்ற அவர், இனவெறிக்கு எதிரான வழக்குகளில் முன்னிலையானார்.
ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு ஆதரவு வழங்கினார். கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார். மேலும் கல்வியில் சீர்திருத்தம் வேண்டும் என்றும் பேசியதுடன் ட்ரம்பின் கொள்கைகளை வெகுவாக சாடினார்.
இவ்வாறான பின்னணியில் ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடன் கமலா ஹரிஸை துணை ஜனாதிபதி பதவிப்போட்டிக்காக தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார்.
அமெரிக்க அரசியலில் மிக முக்கியமான கறுப்பின பெண்களில் ஒருவரான கமலா ஹரிஸ் கட்சியின் தவிர்க்க முடியாத ஆளுமை கொண்டவர்.
கமலா ஹரிஸின் தெரிவு தொடர்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பாராட்டியுள்ள, அதேவேளை டொனால்ட் ட்ரம்ப் வெகுவாக கேலி செய்துள்ளார்.
இதேவேளை, துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததையடுத்து ஜோ பைடன் நடத்திய மக்கள் சந்திப்பில் அவருக்கு 2.60 கோடிக்கு மேலான அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக கிடைத்துள்ளது.
உலகில் போராடி வெற்றி பெற்ற பெண்களிடையே கமலா ஹரிஸ் முதன்மையானவர் என்றால் மிகையில்லை.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM