திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நலம் சீராக இருப்பதாக அவரது மகனும், பாடகருமான எஸ் பி பி  சரண் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

''என் தந்தையின் உடல் நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்ததாக மிக்க நன்றி. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேஷன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. வதந்திகளை நம்ப வேண்டாம். அவரது உடல்நிலை குறித்த தகவல்களை தொடர்ந்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். நன்றி''. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ் பி  பாலசுப்ரமணியம், தன் கட்டை விரலை உயர்த்தி, நம்பிக்கையுடன் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.