பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

14 Aug, 2020 | 09:09 PM
image

(ஆர்.யசி)

நாட்டின் சகல பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுவதுடன் மாணவர்கள் சகலரும் சாதாரண நடைமுறைகளுக்கு அமைய வழமை போன்று செயற்பட முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த காரணிகளை அறிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் கொவிட் -19 வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த நாட்டின் சகல பல்கலைக்கழகங்களும் மீண்டும் திறக்கபடுகின்றது.

 கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவர்களின் பரிட்சைகள்  மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பரிட்சைகள் என படிப்படையாக நடத்தி முடித்துள்ளோம். 

இப்போது நாட்டின் நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாம் நம்புகின்றோம். சுகாதார அதிகாரிகள் எமக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். 

எனவே எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நாட்டின் சகல பல்கலைக்கழகங்களும் வழமையாக ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆகவே மாணவர்கள் சகலரும் தமது கற்கைகளை வழமை போன்று ஆரம்பிக்க முடியும்.

மேலும் பல்கலைக்கழக விடுதிகளில் இதுவரை ஒரு அறையில் ஒருவர் என்ற அடிப்படையில் மாணவர்கள் தங்கவைக்கப்பட்டனர். ஆனால் திங்கட்கிழமை தொடக்கம் வழமையாக அறையில் தங்கவைக்கப்பட வேண்டிய வழமையான எண்ணிக்கையை கொண்ட மாணவர்கள் தங்க முடியும். 

ஆனால் ஒரு அறையில்  ஒரே ஆண்டு மாணவர்களை தங்கவைக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் விடுதிகளுக்கு வரும் வெளியாட்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும். மாணவர்களின் உறவினர்கள், பெற்றோர் மற்றும் ஏனையவர்கள் வரும் நிலையில் அவர்களின் முழுமையான தகவல்களும் பெற்றுக்கொள்ளப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08