பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்தியாவின் தனியார் வைத்தியசாலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார்

தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அவருக்கு செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம்  கடந்த 5 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை நேற்றிரவு மோசமடைந்ததுள்ளமை குறிப்பிடத்தது.