ஷங்காய் நகருக்கான விமானசேவை இரத்து; ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்

Published By: Digital Desk 3

14 Aug, 2020 | 05:04 PM
image

(நா.தனுஜா)

கொழும்பிலிருந்து ஷங்காய் நகருக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை சீன சிவில் விமானசேவை முகவரகத்தினால் நான்கு வாரகாலத்திற்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கடந்த 7 ஆம் திகதி டுபாயிலிருந்து கொழும்பின் ஊடாக ஷங்காய் நகருக்கு 223 சீனப்பிரஜைகளைக் கொண்ட பயணிகள் விமானமொன்றை சேவையில் ஈடுபடுத்தியிருந்தது. இதற்கு முன்னதாகவும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பயணிகளற்ற இதேபோன்ற இரு விமானங்கள் டுபாயிலிருந்து ஷங்காயிற்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக முக்கிய சர்வதேச விமானசேவை நிறுவனங்கள் அணுகும் பரிசோதனை நிலையத்தில், ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பயணிகள் விமானத்தில் இருந்த 223 பயணிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்தப் பரிசோதனைகள் பயணிகள் விமானங்களில் ஏறுவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதுடன், அதன்படி பயணிகள் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. இந்தப் பரிசோதனைகள் பயணிகளுக்கும், விமானசேவை ஊழியர்களுக்குமான முற்பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படுபவையாகும்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளில் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது சீனாவில் விமானம் தரையிறங்கிய பின்னர் கண்டறியப்பட்டது. கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்பத்தில் சீன சிவில் விமானசேவை முகவரகம் புதிய பாதுகாப்புக்கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் மத்தியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 15 பயணிகள் விமானங்களை சேவையில் ஈடுபடுத்தியிருந்ததுடன், அவை ஐக்கிய இராச்சியம் மற்றும் துபாயிலிருந்து 3000 இற்கும் மேற்பட்ட சீனப்பிரஜைகளை தொற்றுப்பரவல் அல்லது வேறு சம்பவங்கள் எவையும் பதிவாகாமல் சீனாவிற்கு அழைத்துச்சென்றிருக்கிறது.

விமானங்களில் 5 இற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டால் மாத்திரமே சீன சிவில் விமானசேவை முகவரகத்தினால் குறித்த விமானசேவையைத் தற்காலிகமாக இடைநிறுத்தும். அந்தவகையில் கடந்த 7 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட விமானத்தில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமையினால், சீன சிவில் விமானசேவை முகவரகத்தின் புதிய கொள்கைகளின் பிரகாரம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவைக்கு 4 வார தற்காலிக இடைநிறுத்தம் விதிக்கப்பட்டிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31