பாராளுமன்ற உறுப்பினர்  சுஜீவ சேனசிங்கவின் சகோதரர்  கொழும்பிலுள்ள உணவு விடுதியொன்றில் மற்றுமொறு நபருடன் காரசாரமான வாக்குவாதமொன்றில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று (10) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியரான நாமல் சேனசிங்க, குறித்த சமிந்த எனப்படும் நபரை பாரளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் பலத்தை நினைவில் வைத்துக்கொண்டு அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நாமால் சேனசிங்கவினை நோக்கி தவறான முறையில் குறித்த நபர் சைகை  செய்தார் எனக் கூறியே குறித்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

மேலும் நாமல் சேனசிங்க தான் ஒரு சிங்கள பௌத்தர் எனவும், இது பெளுத்த நாடு என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுமாறு குறித்த சமிந்த என்ற நபரை நோக்கிக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சமிந்த எனப்படும் குறித்த நபர், நாமலின் செயற்பாடு அவமானத்திற்குரியது  என்பதோடு அறுவருக்கத்தக்கது எனவும் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.