'பெண்குயின்' என்ற படத்தைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'குட்லக் சகி' என்ற படத்தின் டீசர் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், நேரடியாக டிஜிற்றல் தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'பெண்குயின்' என்ற படத்தைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைபடம் 'குட்லக் சகி'. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் நடிகர்கள் ஆதி, ஜகபதி பாபு, ராகுல் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சிறிரான்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். பொலிவுட் இயக்குனரான நாகேஷ் குக்கூனூர்  இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்று காலை 10 மணியளவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.