மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை பெயாலோன் தோட்ட பெரிய சூரியகந்த பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி 2 மாத கர்ப்பிணியாக உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும்,சிறுமிக்குத் தாய் இருந்த போதும் தாய் கைவிட்டுச் சென்றமையால் அச்சிறுமி பாட்டியிடம் வளர்ந்து வந்ததாகவும் கடந்த 3 மாதங்களாக அந்த சிறுமியுடன் அதே தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் தொடர்பு வைத்திருந்ததுடன் பாழடைந்த வீடு ஒன்றில் வைத்து 3 தடவை அந்த சிறுமியை வற்புனர்வுக்கு உட்படுத்தியதாகவும் தற்போது 2 மாத கர்பணியாக உள்ளார் என கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்ததாக மஸ்கெலியா  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் அச்சிறுமியின் பாட்டி செய்த முறைப்பாட்டிற்கு அமைய மஸ்கெலியா பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த இளைஞர் தனது இல்லத்திற்கு மேல் உள்ள பாழடைந்த வீட்டில் வைத்து வன்புணர்வு கொண்டதாகப் பாட்டியிடம் கூறியதையடுத்து பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆகையால் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் அச்சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டனர்.

எனினும் அச்சிறுமிக்கு 18 வயதுக்குக் குறைவாக இருப்பதால் சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.