பல்வேறு பகுதிகளில் நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் இலங்கையுடனான உறவை வலுப்படுத்த பாகிஸ்தான் விரும்புவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி வியாழக்கிழமை தெரிவித்தார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்தனவுக்கு குரேஷி டுவிட்டர் பதவினூடாக வாழ்த்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.