ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வானது எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஜனாதிபதி நேற்று மேலும் பல வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது மற்றும் காமினி செனரத்தை பிரதமரின் செயலாளராக நியமிப்பது தொடர்பாக இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மேலும் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவையின் புதிய செயலாளர்களின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.