கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கடந்த இரண்டு வாரங்களில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 நபர்கள் மீன்பிடி சாதனங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சேருநுவர, பூனாடி, முல்லைதீவு, கொக்குத்துடுவாய் மற்றும் திருகோணமலை போல்டர்பாயிண்ட் ஆகிய கடல் பகுதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட வலைத்தோட்டம், பூனாடி, கோகிலாய், நிர்கொழும்பு, வவுனியா மற்றும் பொடுவக்கட்டு பகுதிகளைச் சேர்ந்த 27 நபர்கள், 05 டிங்கிகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்தது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்பிடி உபகரணங்களுடன் திருகோணமலை மற்றும் முல்லைதீவு மீன்வள உதவி இயக்குநர்களிடமும் குச்சவேலி மீன்வள ஆய்வாளரிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.