ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் இந்நாட்டு காப்புறுதி வரலாற்றில்அதிகளவு போனஸ் தொகையாக 8.2 பில்லியன் ரூபாவை ஆயுள் காப்புறுதி உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ளதுடன் 2005ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் 64.6   பில்லியன் போனஸ் தொகை பெற்றுத்தந்துள்ளது.

அத்துடன்  ஆயுள் காப்புறுதிக்கான சந்தையில் அதிகளவு பலன்களைப் பெற்றுத்தரக்கூடிய ஆயுள் காப்புறுதி      ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் என மக்களது நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. 

ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸின் முறையான முதலீட்டு முகாமைத்துவம் உள்ளமையாலும், 116 பில்லியன் தொகை பெறுமதியான  ஆயுள் காப்புறுதி நிதியைக் கொண்டுள்ளதாலும் தமது காப்புறுதியாளர்களுக்கு உயர்ந்த பலன்களை பெற்றுத்தர முடிவதுடன் இதுவரையிலும் ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் 211 பில்லியன் காப்புறுதி நிதித்தொகையை தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நிறுவனத்தை ஆரம்பித்தது முதற்கொண்டு ஆயுள் காப்புறுதியொன்றினைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை இலங்கையர்களுக்கு வழங்குவதை தமது நோக்காகக்  கொண்டு செயற்படும் ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ்         தற்பொழுது இலங்கை முழுவதும் ஆயுள் காப்புறுதி தொடர்பான தகவலை பரப்பி வருவதில்   முன்னோடியாக திகழ்ந்து வருகின்றது. 

பரம்பரை பரம்பரையாக மக்களது நன்மதிப்பை வென்றமைக்கு ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ்        வென்றுள்ள விருதுகளே போதுமானதாகும். 2020 ஆம் ஆண்டு ப்ரேன்ட் பினான்ஸ் மூலம் வருடத்திற்கான ‘மிகவும் பிரபலமான காப்புறுதி நாமம்”, ‘மக்களது நம்பிக்கையை வென்ற ஆண்டுக்கான சிறந்த காப்புறுதி நாமம்” போன்ற விருதுகள் குறிப்பிடத்தக்கது.

இச்சிறப்பான விருதுகளைப் பெற்றுள்ள அதே வேளை நிலையான நிதி நிலைiயைக் கொண்டுள்ளமையால் ஃபிட்ச் தரநிலைப்படுத்தலில் யுயுயு (டமய) நிலையை இரண்டாவது தடவையாக பெற்றுள்ள இலங்கையின் ஒரேயொரு காப்புறுதி நிறுவனம் இதுவாகும்.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த காப்புறுதி திட்டங்களையும் சேவைகளையும் வழங்கும் நோக்கில் பல புதிய திட்டமில்களை செயற்படுத்தவிருக்கும் ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ்        நாடு முழவதும் 158 கிளை வலையமைப்பைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.