மதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த நான்கு தோட்டத் தொழிலாளர்களை மடுல்சீமைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

மடுல்சீமைப் பகுதியைச் சேர்ந்த ஊவாகெலை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நான்கு பேரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையிலிருந்த மேற்படி நால்வரும் தோட்டத்தில் மேற்கொண்டிருந்த அட்டகாசத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து விரைந்த பொலிசார் குறித்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.