வசதி குறைந்தவர்களுக்காக நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்குதல் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ளும் விசேட கலந்துரையாடல் இன்று (13.08.2020) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்றது.

இதில் பொலிஸ் உயரதிகாரி,சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.