தனியார் காணியில் புதையல் தோண்டிய ஐவரை ஹாலி-எலைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளதோடு, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், பூஜைப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ஹாலி-எலைப் பகுதியைச் சேர்ந்த கந்தேயராவை என்ற இடத்திலேயே மேற்படி புதையல் தோண்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து, ஹாலி-எலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விரைந்த பொலிசார், குறிப்பிட்ட இடத்தை சுற்றி வலைத்து புதையல் தோண்டலில் ஈடுபட்ட ஐவரையும் கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக ஹாலி-எலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.